தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோ மாதிரி இருப்பார்கள் என புதுவை மாநில சபாநாயகர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் எல். முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் என்பவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிலையில், அவர் பேசிய கருத்து மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளி மாணவர்களின் மனநிலை வித்தியாசமாக இருக்கும் என்றும், தனியார் பள்ளிகளின் பாடத்திட்டத்தின் காரணமாக மாணவர்கள் சைக்கோ போல் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 9ஆம் வகுப்பு படிக்கும் போதே 10ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை படித்து முடித்து விடுவார்கள். அதேபோல், 11ஆம் வகுப்பு படிக்கும் போது 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை முடித்து விடுவார்கள்.
இந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்களின் மனநிலை மாறிவிடுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அதே நேரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைவாக இருந்தாலும், உடல் மன ரீதியாக, மன ரீதியாக அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அவர் கூறினார்.
தனியார் பள்ளி மாணவர்கள் குறித்து சபாநாயகர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.