Publish Date: Fri, 19 Jan 2024 (12:23 IST)
Updated Date: Fri, 19 Jan 2024 (12:31 IST)
சீர்காழி அருகே திருமுல்லை வாசலில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளி மாநில மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில் ,சீர்காழி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் செல்வி, தலைமையில் தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் மணிகண்டகணேஷ், ராஜேந்திரன் மற்றும் போலீசார் திருமுல்லைவாசல் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை நடைபெற்று வருவதாக வந்த புகாரின் பேரில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது திருமுல்லைவாசல் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த காந்திமதி(50) என்பவர் புதுச்சேரி மாநில 800 மது பாட்டில்கள் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மூவர் மீது வழக்கு பதிவு செய்து மது விற்பனையில் ஈடுபட்ட காந்திமதியை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.