தண்ணீர் தகராறில் கத்திக்குத்து! – தொடரும் வாடகை வீட்டு வன்முறைகள்!

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (08:38 IST)
புதுச்சேரியில் தண்ணீர் திறந்து விடாத பிரச்சினையில் வீட்டு உரிமையாளரை குடியிருந்தவர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பு
துச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது வீட்டில் அருண் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். தனது வீட்டிற்கு முறையாக தண்ணீர் திறந்துவிடவில்லை என அருண் வீட்டின் உரிமையாளரோடு அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டின் உரிமையாளர் புருஷோத்தமனுக்கும், அருணுக்கும் சண்டை முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அருண் கத்தியால் புருஷோத்தமனை குத்தியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் தலைமறைவான அருணை தேடி வருகின்றனர்.

சமீபத்தில் சென்னையில் வீட்டு உரிமையாளர், குடியிருப்பவர் இடையே ஏற்பட்ட சண்டையிலும் வீட்டின் உரிமையாளர் குத்திக் கொல்லப்பட்ட நிலையில் அதே போன்ற சம்பவம் புதுச்சேரியிலும் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments