Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5,8 வகுப்புகளுக்கு ஆல்பாஸ் முறை ரத்து.. புதுவை கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 24 டிசம்பர் 2024 (16:27 IST)
5,8 வகுப்பு மாணவர்களுக்கு ஆல்பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்த நிலையில், புதுச்சேரியில் ஆல்பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம்  பேசிய போது, மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்று அறிக்கையின் அடிப்படையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி ரத்து என்ற உத்தரவு புதுச்சேரியில் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். மேலும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு களில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும் சிறந்த கல்வியாளராக உருவாக்கவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார்.

எனவே, மாணவர்கள் இடைநீக்கம் என்பதற்கான வாய்ப்பு இங்கே இருக்காது என்றும் தெரிவித்தார். ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தில் கட்டாய தேர்ச்சி முறை தொடரும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நேற்று மத்திய அரசு ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் இறுதி ஆண்டு தேர்வில் தேர்ச்சி அடையவில்லை என்றால் மறு தேர்வு எழுத வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அடுத்த வகுப்புக்கு அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அறிவித்தது. மேலும், இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு நடத்தப்படும் என்றும், மறு தேர்வில் தோல்வி அடைந்தால், மீண்டும் அதே வகுப்பில் ஒரு ஆண்டு படிக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்ததால் பரபரப்பு..!

கேரள பாஜக தலைவர் அறிவிப்பு.. தமிழக தலைவர் அறிவிப்பு எப்போது?

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி இல்லை.. மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

பஸ் ஓட்டிக்கொண்டே ஐபிஎல் மேட்ச் பார்த்த டிரைவர்.. டிஸ்மிஸ் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments