Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணம் செய்துக்கொள்ள கூறிய காதலியை குழந்தையோடு புதைத்த பூ வியாபாரி

Advertiesment
திருமணம் செய்துக்கொள்ள கூறிய காதலியை குழந்தையோடு புதைத்த பூ வியாபாரி
, திங்கள், 4 டிசம்பர் 2017 (11:30 IST)
திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்திய காதலியை குழந்தையோடு கொன்று புதைத்து விட்டதாக பூ வியாபாரி ஒருவர் போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 
கிளியனூர் பகுதியில் பிறந்து சில மாதங்களே ஆன ஆண் குழந்தை சடலம் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடிக்கிடும் தகவல்கள் வெளியாகியது. புதுவை வானரப்பேட்டையை சேர்ந்த குணவதி பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். பூக்கள் வாங்க மார்க்கெட்டுக்கு சென்று வரும்போது திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் பழக்கம் எற்பட்டுள்ளது.
 
நாளடைவில் இருவரிடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது. ஆறு மதங்களுக்கு முன் குணவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குணவதி, பிரபாகரனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். மேலும், பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணமானது குணவதிக்கு தெரியவந்துள்ளது.
 
கடந்த மாதம் 25ஆம் தேதி பிரபாகரன் குணவதியையும், குழந்தையையும் அழைத்துச் சென்றுள்ளார். அதன்பின் குணவதி வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. குணவதியின் பெற்றோர் அந்த குழந்தை குணவதியின் குழந்தை என்பதை உறுதி செய்தனர்.
 
இதையடுத்து பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் பிரபாகரன், தொடர்ந்து திருமணம் செய்துக்கொள்ளுபடி வற்புறுத்தி வந்ததால் குணவதியையும், குழந்தையையும் கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.கே.நகரில் 7 முனை போட்டி - வெல்லப்போவது யார்?