Publish Date: Sun, 09 Jan 2022 (16:57 IST)
Updated Date: Sun, 09 Jan 2022 (16:59 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் காலவரையின்றி பள்ளிகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா, ஒமிக்ரான் வைரஸ்கள் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் போலவே புதுவையிலும் பரவி வருகிறது என்பதும் இதனை அடுத்து புதுவை மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது
இந்த நிலையில் நாளை முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் கிடையாது என்றும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்படும் என புதுவை மாநில அரசு தெரிவித்துள்ளது
பள்ளிகள் மூடப்பட்டாலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் புதுவை மாநில கல்வி அமைச்சர் நமசிவாயம் தெரிவித்துள்ளார்
மேலும் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகளுடன் வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது