Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு ரத்து: அதிரடி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (16:47 IST)
கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே
 
இந்த நிலையில் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் இந்த ஆண்டு இன்னும் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில் முதலாமாண்டு இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகள் கிட்டத்தட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இருப்பினும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்த வாய்ப்பு இருப்பதாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் தற்போது தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் இறுதியாண்டு தேர்வு இப்போதைக்கு நடத்தும் வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது 
 
இந்த நிலையில் புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக செய்முறை தேர்வு மற்றும் உள் மதிப்பீட்டு மதிப்பின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தை அடுத்து மற்ற பல்கலைக்கழகமும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments