தமிழகத்தில் சில மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை ஒட்டி கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவிழக்கும் மேலும் மழையும் மெல்ல மெல்ல குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 2 நாட்களாக மழை இல்லாத நிலையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, வேலூர், கட்டிமேடு, ஆதிரங்கம், பள்ளங்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.