Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு!!

பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு!!
, வெள்ளி, 15 டிசம்பர் 2017 (18:21 IST)
நடப்பு கல்வி ஆண்டுக்கான பத்தாம் அவகுப்பு, பதினொறாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 
 
பத்தாம் வகுப்பிற்கான தேர்வுகள் 2018 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடக்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பதினொன்றாம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு மார்ச் 7 ஆம் தேதி ஆரம்பமாகி ஏப்ரல் 16 ஆம் தேதி முடிகிறது.
 
12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:
 
மார்ச் 1 - தமிழ் முதல்தாள் 
மார்ச் 2 - தமிழ் 2 ஆம் தாள் 
மார்ச் 5 - ஆங்கிலம் முதல் தாள் 
மார்ச் 6 - ஆங்கிலம் 2 ஆம் தாள் 
மார்ச் 9 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல் 
மார்ச் 12 - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, உணவியல் 
மார்ச் 15 - அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்பிரிவு 
மார்ச் 19 - இயற்பியல் மற்றும் பொருளியல் 
மார்ச் 26 - வேதியியல், கணக்கு பதிவியல் 
ஏப்ரல் 2 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம் 
ஏப்ரல் 6 - இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரிவேதியியல், தமிழ்சிறப்பு பாடம்
 
11 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:
 
மார்ச் 7 - தமிழ் முதல்தாள்
மார்ச் 8 - தமிழ் 2 ஆம் தாள் 
மார்ச் 13 - ஆங்கிலம் முதல்தாள் 
மார்ச் 14 - ஆங்கிலம் 2 ஆம் தாள் 
மார்ச் 20 - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, உணவியல் 
மார்ச் 23 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல் 
மார்ச் 27 - இயற்பியல் மற்றும் பொருளியல் 
ஏப்ரல் 3 - வேதியியல், கணக்கு பதிவியல் 
ஏப்ரல் 9 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம் 
ஏப்ரல் 13 - இந்திய கலாச்சாரம், தகவல் தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரிவேதியியல், தமிழ்சிறப்பு பாடம் 
ஏப்ரல் 16 - அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்பிரிவு 
 
10 ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை: 
 
மார்ச் 16 - தமிழ் முதல்தாள் 
மார்ச் 21 - தமிழ் 2 ஆம் தாள் 
மார்ச் 28 - ஆங்கிலம் முதல்தாள் 
ஏப்ரல் 4 - ஆங்கிலம் 2 ஆம் தாள் 
ஏப்ரல் 10 - கணிதம் 
ஏப்ரல் 12 - விருப்பமொழிப் பாடம் 
ஏப்ரல் 17 - அறிவியல் 
ஏப்ரல் 20 - சமூக அறிவியல்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொம்மை கல்யாணம் விளையாட்டு விளையாடுறோம்: 12 வயது சிறுமியை ஏமாற்றி மணந்த நபர்!