Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூடுதலாக தடுப்பூசிகள் போட வலியுறுத்தி வாக்குவாதம்

Advertiesment
கூடுதலாக தடுப்பூசிகள் போட வலியுறுத்தி வாக்குவாதம்
, திங்கள், 14 ஜூன் 2021 (11:21 IST)
தடுப்பூசி மையங்களில் கூடுதலாக தடுப்பூசிகள் போட வலியுறுத்தி பொதுமக்கள் போலிசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. 

 
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 19 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ள  சூழலில் பொதுமக்களும் காலையில் இருந்து வரிசையாக நின்று தடுப்பூசிகள் போட்டுக் கொண்டு வருகின்றன. மேலும் கோவை மாவட்டத்தில் 89 மையங்களில் கோவிஷில்டு தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. 
 
பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி பள்ளியில் காலை 8 மணியில் இருந்தே டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகமாக கூடியதால் அங்கு போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தடுப்பூசி மையங்களில் 100 முதல் 150 வரை தடுப்பூசிகள் போட அறிவுறுத்தப்பட்ட நிலையில் கூடுதலாக தடுப்பூசிகள் போட வேண்டும். தினமும் எவ்வளவு தடுப்பூசிகள் போடுகிறீர்கள்?? என்று அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சமரச பேச்சு நடத்தி பொதுமக்களை கலைந்து செல்ல வைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகம் உயிர்த்திருக்க குருதி அவசியம் – கமல்ஹாசன் ரத்த தான பதிவு!