Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நூலகங்கள் ஒரே இடத்தில் இயங்க பொதுமக்கள் கோரிக்கை

Advertiesment
நூலகங்கள் ஒரே இடத்தில் இயங்க பொதுமக்கள் கோரிக்கை
, வெள்ளி, 14 ஜனவரி 2022 (00:06 IST)
கரூர் அருகே  தவிட்டுப் பாளையத்தில் நூலகங்கள் ஒரே இடத்தில் இயங்க பொதுமக்கள் கோரிக்கை
 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நஞ்சை புகழூர் தவிட்டுப் பாளையத்தில் இயங்கி வரும் அண்ணா மறுமலர்ச்சி நூலகமும் ,பொது நூலகத்துறை நூலகமும் இணைந்து இயங்க உதவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
 
2006 -ல்அண்ணா மறுமலர்ச்சி நூலக கட்டிடத்தில் மறுமலர்ச்சி நூலகம் மு.க.ஸ்டாலின் அப்போது திறந்து வைத்தார். பின்னர் பொதுநூலகத்துறை ஊர்புறநூலகம் 2007ல் இருந்து அண்ணா மறுமலர்ச்சி நூலக கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இப்போது பஞ்சாயத்தின் மூலம் அண்ணா மறுமலர்ச்சி நூலகம் புதுப்பிக்க படுவதால் காலி செய்து தருமாறு கூறுகிறார்கள். வேறு இடமும் இல்லாதகாரணத்தாலும்,ஊர் மக்கள் வேறு பக்கம் நூலகத்தை மாற்ற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
இரண்டு நூலகமும் ஒரே இடத்தில் இயங்கிட வேண்டும். பொதுமக்கள். மற்றும் அரசு அலுவலகர்கள். சமூக ஆர்வலர்கள். பள்ளி மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வரும் இந்த நூலகத்தை இடம் மாற்றாமல் இருக்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரச்சந்தையில் காய்கறி வாங்க குவிந்த மக்களால் நோய் தொற்று பரவும் அபாயம்