Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை கொன்று வீடியோ எடுக்கும் சைக்கோ ...அதிரவைக்கும் சம்பவம்...

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (13:42 IST)
செஞ்சியை அடுத்த பெரும்புகை கிராமத்தில் வசிப்பவர் குட்டியம்மாள். இவர் அப்பகுதியில் ஆடு மேய்த்து வருகிறார். ஆனால் சில நாட்களுக்கு முன்னர் மாயமானார். இந்நிலையில் தனது அம்மா குட்டியம்மாளை தேடும் முயற்சியில் இறங்கிய  கார்த்திகேயனுக்கு, அவரது உறவினரான தேவேந்திரனுடன் அவர் அம்மாவை பார்த்ததாக சிலர் கூறியுள்ளனர்.
அதன் பின்னர் தேவேந்திரன் வீட்டுக்குச் சென்று தன் தாயை பற்றி விசாரித்துள்ளார். அப்போது தேவேந்திரனின் மனைவி கூறிய செய்து கார்த்திகேயனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தனது மனைவியை தவிர்த்து பிற பெண்களை மயக்கி அங்குள்ள மலை உச்சிக்கு அழைத்துச்சென்று அவர்களைக் கொலை செய்து அதை வீடியோவாக பதிவு செய்து பார்த்து ரசிக்கும் ஒரு கொடூர சைக்கோ மனநோயாளி என தெரியவந்தது.
 
மேலும் சில நாட்களுக்கு முன் சுமதி என்ற பெண் எப்படி கொலை செய்யப்பட்டார்  என்பது குறித்த வீடியோவையும் அவர் கார்த்திகேயனிடம் காட்டியுள்ளார். 
 
அந்த வீடியோவில் தேவேந்திரன்  கொலை செய்த பெண்ணின் அருகில் அமர்ந்து ஒரு வீடியோ எடுத்து அதில் பேசுவதும் வெளியாகியுள்ளது.அதில் ’இவ்வளவு நாளா நல்ல தான பேசிக்கிடிருந்தது. இப்ப கூப்பிட்டா வர மாட்டிங்கு .. இப்ப ஜெயிலுக்கு போனா ..பெயில்ல வந்திருவேன்..’என்று தேவேந்திரன் பேசுகிறார்.
 
இதைகேட்ட கார்த்திகேயன் அதிர்ச்சியடைந்து தன் தாயிக்கும் இதுபோல் அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என சந்தேகித்து போலீஸிடம் தெரிவித்துள்ளார்.
 
பின்னர் போலீஸார் மேல்மலையனூரில் செல்லும் வழியில் உள்ள கூலாங்கல் மலையில் தேடிய போது குட்டியம்மாளின் உடல் அழுகிய நிலையில் கிடைத்துள்ளது.
 
மேலும் சுமதி என்ற பெண்ணையும் மலைப்பகுதிக்கு அழைத்துச்சென்று சுமதியின் கழுத்தில் கயிற்றை இறுக்கி கொலை செய்துள்ளார்.
 
மேலும் இதுபோன்று பல பெண்களை வன்புணர்வு செய்து அவர்களை கொன்றுள்ளதாகவும் அவன் தன் மனையிடம் கொலை சம்பந்தமான வீடியோ பதிவு  உள்ள மெமரி கார்டை கொடுத்துள்ளான்.
 
தற்போது போலீஸாரின் கையில் வீடியோ சிக்கியதால் தேவேந்திரனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ்க்கு சொந்த பணத்தில் சம்பளம்.. ட்ரம்ப் அறிவிப்பு..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. முழு விவரங்கள்..!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில்.. போக்குவரத்து துறை வெளியிட்ட நெறிமுறைகள்..!

நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments