Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகள் பாலியல் விவகாரம்: தாளாளர், முதல்வரிடம் 3 மணி நேரம் விசாரணை!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (18:35 IST)
மாணவிகள் பாலியல் விவகாரம்: தாளாளர், முதல்வரிடம் 3 மணி நேரம் விசாரணை
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வரிடம் தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் 
 
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் சில ஆசிரியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்டு வருவதால் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டது
 
இதனையடுத்து சம்மன் அனுப்பிய காவல்துறையினர் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரிடம் 3 மணி நேரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

அடுத்த கட்டுரையில்