Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு: பதட்டத்தில் சென்னை!

போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு: பதட்டத்தில் சென்னை!
, திங்கள், 23 ஜனவரி 2017 (10:28 IST)
தமிழகம் முழுவதும் இன்றுடன் ஏழாவது நாளாக மாணவர்கள் போரடி வருகின்றனர். தமிழக அரசு அவசர சட்டம் ஏற்படுத்தியும்  மாணவர்கள் அதனை ஏற்காமல் நிரந்தர சட்டம் வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 
மாணவர்கள் கோரிக்கை நிறிவேறியது எனக்கூறிய போலீஸார் மாணவகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும்  போலீசாரின் கோரிக்கையை மாணவர்கள் ஏற்க அரை நாள் அவகாசம் கேட்ட நிலையில், அதனை ஏற்க போலீசார் மறுத்து  விட்டனர்.
 
இந்நிலையை தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து வழிகளையும் தடுப்புகள் வைத்து காவல்துறையினர் அடைத்தனர்.
 
தடுப்புகளை மீறி போராட்டத்தில் கலந்துக்கொள்ள வந்த போராட்டக்காரர்கள் மீது அவ்வை சண்முகம் சாலையில்  காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசினர். இதனால், அவ்வை சண்முகம் சாலை உட்பட மெரினாவை சுற்றி பதற்றம்  நிலவுகிறது. மேலும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதால், கோபம் கொண்டு கல் வீச்சில் ஈடுபட்டனர். இதில் போலீஸ்  அதிகாதியின் மீது கல் பட்டு காயம் ஏற்ப்பட்டதால், போலிஸாரும், கண்ணீர் புகை குண்டு, கல் வீசி தாக்குதலை ஏற்படுத்தி  வருகின்றனர். இதனால் அவ்வை சண்முகம் சாலை,  சென்னை மெரினா கடற்கரை போன்ற பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது: வெளியே பதற்றம்; உள்ளே?