Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சர் காரை முற்றுகையிட்டு போராட்டம்: கோவையில் பரபரப்பு

Advertiesment
அமைச்சர் காரை முற்றுகையிட்டு போராட்டம்: கோவையில் பரபரப்பு
, ஞாயிறு, 22 ஜனவரி 2017 (12:24 IST)
அமைச்சர் வேலுமணி காரை முற்றுகையிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

 
கோவையில் இன்று அமைச்சர் வேலுமணி ரேக்ளா பந்தயந்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து அவரது காரை முற்றுகையிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவசர சட்டம் வேண்டாம், நிரந்தர சட்டம் தான் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையான போரட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையில் அமைச்சர் வேலுமணி தலமையில் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த போராட்டக்காரர்கள் அமைச்சர் வேலுமணி காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து போக மறுத்து ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர சட்டம் வேண்டும் என்ற கோசம் எழுப்பி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணப்பாறையில் ஜல்லிக்கட்டு போட்டி