Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டான்லி மருத்துவமனையில் கருப்பு பேண்ட் அணிந்து போராட்டம்...

ஸ்டான்லி மருத்துவமனையில் கருப்பு பேண்ட் அணிந்து போராட்டம்...
, செவ்வாய், 15 ஜூன் 2021 (11:46 IST)
ஸ்டான்லி மருத்துவமனையில் முதுகலை மருத்துவ மாணவர்கள் உதவி தொகையை உயர்த்தக் கோரி கருப்பு பட்டை அணிந்து போராட்டம். 

 
தமிழ்நாடு முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவிலேயே குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை வலியுறுத்தி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில்  போராட்டம்  நடைபெற்றது. முதுநிலை மறுத்துவமாணவர் பாலாஜி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறியதாவது..
 
தமிழ்நாட்டின் அரசு சாரா முதுகலை மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் (சி.ஆர்.ஆர்.ஐ) ஆகியோரின்  உதவி தொகையானது  குறைவாக இருப்பதாகவும்  2021 ம் ஆண்டில் தமிழ்நாட்டின் உறைவிட மருத்துவர்களின் உதவித்தொகை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை விட மிகக் குறைவாக இருக்கிறது என்றும் உதவித்தொகை உயர்வு தொடர்பான  கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று நம்புகிறோம் என்றும் கூறினர்.
 
தமிழகத்தில் தற்போது 20 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வரை மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் குஜராத் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் 80 ஆயிரத்திற்கும் மேல் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
 
அரசு சாரா எம்.டி / எம்.எஸ் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு  ₹ 70,000, 75,000, மற்றும் 80,000 எனவும் டி.எம் / எம்.சி.எச் உயர் சிறப்பு முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு, 80,000,  85,000, மற்றும்  90,000 என கொடுக்க வேண்டும் எனவும் ஆண்டுதோறும்  பணவீக்க விகிதத்தைப் பொறுத்து உதவித்தொகையை 10% உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
 
உதவி தொகை உயர்வை நிலுவை தொகையுடன் மார்ச் 2021யில் இருந்து வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இந்த கருப்பு பட்டை ஆர்ப்பாட்டம், அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளை கவனித்து அவற்றை விரைவில் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் ஒரு மாதத்திற்கு மேலாக உதவித்தொகை உயர்வுக்கான பல மனுக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் கூறினர்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எந்த சேவைகளும் பாதிக்க படாது என்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து முதுகலை, உயர் சிறப்பு மற்றும் பயிற்சி மருத்துவர்களின் குரல்களாக நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றும் கூறினர்.
 
இறுதியாக ஸ்டான்லி மருத்துவமனை தலைவர் பாலாஜி அவர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மருத்துவ மாணவர்களின் இந்த கோரிக்கையை அரசு நிச்சயம் ஏற்றுக் கொள்ளும் என்று கூறினார். மேலும் உதவித்தொகை உயர்வு தொடர்பாக மாணவர்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் பூர்த்தி செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி-ஸ்டாலின் சந்திப்பு: என்னென்ன கோரிக்கைகள்?