Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் செயல் அலுவலரை பழிவாங்கும் செயல்: பேரூராட்சி துறை இயக்குநரை கண்டித்து ஆர்பாட்டம்

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (16:26 IST)
கரூர் அருகே பேரூராட்சி பகுதிகளுக்கு சிறப்பான திட்டங்களை தீட்டிய பேரூராட்சி பெண் செயல் அலுவலரை பழிவாங்கும் செயலுடன் அடிக்கடி பணி மாறுதல்களில் ஈடுபடும் பேரூராட்சி துறை இயக்குநரை கண்டித்து தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர்.



கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்திற்கு, மாநில பொதுச்செயலாளர் எஸ்.கனகராஜ் சிறப்புரையாற்றினார். மேலும், இந்த ஆர்பாட்டத்தில், கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி தேர்வு நிலை பேரூராட்சியில் தேர்வு நிலை செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த  உமாராணி என்பவரை பழிவாங்கும் நோக்கில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகமணி பேரூராட்சிக்கு பணிமாறுதல் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு,  ஒராண்டு காலத்திற்குள் மாவட்டம் விட்டு, மாவட்டம் பணி மாறுதல் என்பதை பழிவாங்கும் நடவடிக்கையாக கருதியும், அந்த பள்ளப்பட்டி பகுதி மக்களிடம் எந்த வித புகார்களும் வராத நிலையில், அந்த பகுதி மக்களுக்கு நல்ல பல திட்டங்களை அப்பகுதி மக்களுக்கு செம்மையாக பணிபுரிந்து வந்த நிலையில் இந்த திடீர் மாறுதல் என்பதை கண்டித்தும் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டது.

மேலும் பணிமாறுதல் செய்யப்பட்ட உமாராணி, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் என்ற அடிப்படையில் தான் பணிமாறுதல் செய்யப்பட்டதாகவும், ஒரு சங்கத்தின் மாநிலத்தலைவருக்கே இந்த நிலை என்றால், மற்ற ஊழியர்களுக்கு எவ்வாறு என்றும், முழக்கங்கள் எழுப்பியதோடு, மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி மீது போடப்பட்ட காவல்துறையின் வழக்கை வாபஸ் பெறுவதோடு, புகாரை திரும்ப பெறாத பட்சத்தில் தமிழக அளவில் வரும் 26 ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆர்பாட்டங்கள் மற்றும் தொடர் போராட்டங்கள் நடத்தப்போவதாகவும், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.கனகராஜ் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், இந்த ஆர்பாட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பேட்டி : எஸ்.கனகராஜ் – மாநில பொதுச்செயலாளர் – தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம்

வீடியோவை காண

சி.ஆனந்தகுமார்

 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments