Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போதை விருந்தில் நள்ளிரவில் விபச்சாரம்…25 இளம்பெண்கள் கைது

Advertiesment
போதை விருந்தில் நள்ளிரவில் விபச்சாரம்…25 இளம்பெண்கள் கைது
, திங்கள், 19 ஜூன் 2023 (17:49 IST)
கர்நாடக மாநிலம் பெங்களூரில் மதுபான விடுதிகளில் விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்த நிலையில், அங்கு சென்று விசாரணை நடத்தியதில் 25 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு எம்.ஜி.ரோட்டில் பல மதுபான விடுதிகள் உள்ளன.  இங்குள்ள மதுபான விடுதிகளில் விபச்சாரம் போதைப் பொருட்களுடன் போதை விருந்து நடைபெறுவதாக  கப்பன் பூங்கா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து,  60 பேர் கொண்ட போலீஸார் 3 குழுக்களாகப் பிரிந்து சம்பவ இடத்திற்குச் சென்று, மதுபான விடுதிக்குள் நுழைந்தனர். உள்ளே, ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருந்தனர். அவர்கள் போலீஸாரை பார்த்து தப்பியோட முயன்றனர். அவர்களில் 55 பேரை கைது செய்தனர். இதில், 25 பேர் இளம்பெண்கள்.

கைதானவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில், அவர்கள் போதைப்பொருள்  உட்கொண்டது உறுதி செய்யப்படது.

அதன்பின்னர், அவர்களின் 55 பேர் பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’பாகுபலி’ சமோசாவை சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு.. இதுவரை யாராலும் சாப்பிட முடியவில்லை..!