Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக, டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டம்

Advertiesment
TTF Vasan
, புதன், 20 செப்டம்பர் 2023 (13:38 IST)
பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் பைக் ஸ்டண்ட் செய்து விபத்தில் சிக்கி, கைதாகியுள்ள  நிலையில், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக, டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்தில் டிடிஎப் வாசன் பைக்கில் சென்று கொண்டிருந்த நிலையில் அவர் வீலிங் செய்ய முயன்ற போது விபத்துக்குள்ளாகி காயம் அடைந்தார்.

அவர் மீது ஆபத்தான முறையில் வாகனம் இயக்குதல் உள்பட 5  பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்  நேற்று அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் செய்தனர்.

அப்போது டிடிஎப் வாசனை அக்டோபர் மூன்றாம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டார்.

ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக, டிடிஎஃப் வாசனுக்கு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம்  இன்று  நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,  டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர்  உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஆணையரகம் பரிந்துரை செய்திருந்த நிலையில், இன்று வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற உள்ளனர். அவரது விளத்தை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

போலீஸார் கைது செய்த போது அவர் கையில் கட்டுப்போட்டிருந்த நிலையில், இன்று மருத்துவமனையில் அவர் அதே கையை வீசிக் கொண்டு நடந்த வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கு விமர்சனம் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலாண்டு தேர்வு வினாத்தாள் 'வாட்ஸ் அப்'பில் லீக்.. அதிர்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை..!