தமிழகத்தில் உள்ள 1.72 லட்சம் மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளது மீனவ குடும்பங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது
ஒவ்வொரு வருடமும் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் என்று வருவது உண்டு. அந்த காலங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதால் வருமானம் இன்றி இருப்பார்கள். இந்த நிலையில் மீனவர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ஒன்றை அறிவித்துள்ளார்
இதன்படி மீன்பிடி தடை காலங்களில் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5 ஆயிரம் வழங்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் மூலம் தமிழகத்திலுள்ள 1.72 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன் பெறுவார்கள் என்று அவர் அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை நாளை அல்லது நாளை மறுநாள் முதல் வழங்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.