காதலர் தினத்தன்று கள்ளக்காதலிக்கு சிக்னல் கொடுத்த கள்ளக்காதலன்: அடித்து துவைத்த கணவன்

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (11:33 IST)
சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் மனைவியின் கள்ளக்காதலனை அடித்து துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் ராஜா. லாரி டிரைவரான இவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார், இவரது மனைவிக்கு அதே பகுதியை சேர்ந்த ரவி(28) என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
 
இதனையறிந்த ராஜா மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவரது மனைவி ரவியுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார்.
 
இந்நிலையில் நேற்று ரவி, ராஜா வீட்டிற்கு வெளியே எஇன்றுகொண்டு கள்ளக்காதலிக்கு சிக்னல் கொடுத்துள்ளார். இதை பார்த்த ராஜா, ஆத்திரமடைந்து ரவியிடம் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போய் இருவரும் கட்டிப்பிடித்து உருண்டு புரண்டு சண்டை போட்டனர்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்டர் செய்த நோக்கியா போன் 16 வருஷம் கழிச்சி டெலிவரி!... சுவாரஸ்ய தகவல்!...

நீயா நானா பாத்துக்கலாம்!.. டிரம்பின் போன் காலை எடுக்காமல் தவிர்க்கும் மோடி!...

புதினை தூக்கும் பிளான் இப்போது இல்லை!.. டொனால்ட் டிரம்ப் நக்கல்!....

வேணாம்!. எங்ககிட்ட வச்சிக்காதீங்க!.. தென் கொரியாவை எச்சரித்த வடகொரியா அதிபர்!...

அமெரிக்கா உள்ளே வந்தால் சுடுவோம்.. அப்புறம்தான் பேசுவோம்!.. டென்மார்க் எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments