Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவனின் சடலத்தைப் பார்த்து சிரித்ததால் சிக்கிய மனைவி

Advertiesment
கணவனின் சடலத்தைப் பார்த்து சிரித்ததால் சிக்கிய மனைவி
, ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (13:15 IST)
கணவனை கொலை செய்த மனைவி, சடலத்தை பார்த்து சிரித்ததால், சந்தேகப்பட்டு போலீசார் விசாரணை நடத்தியதில் கணவனை கொன்றதை ஒப்புக்கொண்டார். 
 
ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டம் நகுலவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்மோகன் ரெட்டி. அவரது மனைவி ரஜினி. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மருத்துவர். வெங்கட நாராயணா என்பவரிடம் ஜெகன்மோகன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது டாக்டர். வெங்கட நாராயணாவுக்கும், ஜெகன் மோகனின் மனைவி ரஜினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தங்களுக்கு இடையூறாகவுள்ள ஜெகன்மோகன் ரெட்டியை கொலை செய்ய ரஜினியும், வெங்கட நாராயணாவும் திட்டமிட்டுள்ளனர்.
 
திட்டத்தின்படி ஜெகன்மோகன் ரெட்டியை அத்மகூர் வனப்பகுதிக்கு கூட்டிச்சென்ற டாக்டர் வெங்கட நாராயணா, கூலிப்படையினரின் உதவியுடன் அவரை கொலை செய்துள்ளார். அதேவேளையில் தனது கணவனை காணவில்லை என காவல்நிலையத்தில் ரஜினி புகார் தெரிவித்துள்ளார். விசாரணையை தொடங்கிய போலீசார் வனப்பகுதியில் ஜெகன்மோகனின் உடலை கைப்பற்றியுள்ளனர். 
 
கணவன் இறந்தது குறித்து ரஜினிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த ரஜினி, கணவனின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழாமல் லேசாக புன்னகைத்துள்ளார். ரஜினி சிரிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர் மீது சந்தேகப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர்.. விசாரணையில் தானும்,  டாக்டரும் இணைந்தே தன் கணவனை கொலை செய்ததாக ரஜினி ஒப்புக்கொண்டார். இதனைத்தொடர்ந்து ரஜினி, டாக்டர் வெங்கட நாராயணா உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எரிந்து கொண்டிருந்த பிணம்: எடுத்து தின்ற நபர்: நெல்லையில் பெரும் பரபரப்பு