Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீன்குழம்பால் ஒரு குடும்பமே சீரழிந்து போன விபரீதம்!!

Advertiesment
மீன்குழம்பால் ஒரு குடும்பமே சீரழிந்து போன விபரீதம்!!
, திங்கள், 4 பிப்ரவரி 2019 (11:19 IST)
மாமியாருடன் மீன் குழம்பு சம்மந்தாக நடந்த பிரச்சனையில், மருமகள் தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி அம்மு. இவர்களுக்கு 2  மற்றும் 8 வயதில் இரு மகன்கள் இருந்தனர். பிரபுவுடன் அவரது தாய் மீனா வசித்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் பிரபு  இறந்து விட்டார்.
 
இந்நிலையில் அம்மு தனது மாமியார் மீனா மற்றும் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். நேற்று காலை மாமியார் மீனா, மருமகள் அம்முவிடம் தனக்கு மீன் குழம்பு சமைத்து தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
webdunia
 






















இதனால் மனமுடைந்த அம்மு, தனது இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாமும் விஷம் அருந்தினார். ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் அம்முவின் குழந்தைகள் இறந்துவிட, அம்மு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மீன் குழம்புக்காக ஒரு குடும்பமே சீரழிந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தி.மு.க., அதிமுக இரண்டுமே வேண்டாம் – பாமக எடுத்த புது முடிவு ?