தமிழகத்தில் தனியார் ரயில்களை அனுமதிப்பதற்கான செயல்திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளாதாகவும் அவை இந்தாண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரவுள்ளதகவும் தகவல் வெளியாகிறது.
இந்தியாவில் தனியார் ரயில்கல் அனுமதிப்பதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.
இதனையடுத்து தமிழகத்தில் தனியார் ரயில்களை அனுமதிப்பதற்கான அடிப்படைப் பணிகளை தென்னக ரயில்வே முடித்துள்ளது.
எனவே இம்மாத இறுதிக்குள்ளாகவே எந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்பது உறுதி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து 11 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் இம்மாத இறுதியில் கோரப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
சென்னையில் இருந்து குறிப்பாக முக்கிய மாவட்டங்களான கோவை,மதுரை, திருநெல்வேலி, மங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில்களை இயக்கவுள்ளதாகவும் ரயில்வே வாரியத்தலைவர் சுனீத் சர்மா கூறியுள்ளார். இப்பணிகள் நிறைவடைந்த பின் இந்தாண்டு இறுதியில் நிச்சயம் தனியார் ரயில்கள் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.