Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டம் ! முக்கிய அறிவிப்பு

தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டம் ! முக்கிய அறிவிப்பு
, வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (16:04 IST)
தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டம் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்களைத் இத் தொற்றிலிருந்து காக்க மத்திர அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு வராமல் தடுக்க 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் மே 1 முதல் இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்கூட்டியே ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு தொடங்கும் நிலையில் அரசின் www.cowin.gov.in என்ற தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால்,  தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டம் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மெட்ரிகுலேசன் இயக்குநர் கருப்பசாமி அறிவித்துள்ளதாவது: , அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கற்பித்து வரும் நிலையில், தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உள்ளதால், பிளஸ் 2 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது - மாநகராட்சி ஆணையர் தகவல்