குழந்தைகளின் படிப்பு செலவுக்கு பணம் திரட்ட வேண்டும் என்ற காரணத்திற்காக ஆயுள் தண்டனை கைதியை சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது
ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் செந்தில்குமார் என்பவர் தனது குழந்தைகளுக்கு படிப்புச் செலவிற்காக பணம் திரட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதே வேண்டுகோளை அவருடைய மனைவி வேம்பு அவர்களும் விடுத்து மனுதாக்கல் செய்திருந்தார்
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு பணம் திரட்டுவதற்கு ஆயுள் தண்டனை கைது செந்தில்குமாருக்கு விடுப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செந்தில்குமார் - வேம்பு தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களில் இரண்டு குழந்தைகள் மருத்துவம் படித்து வருவதாகவும், மற்ற இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவுக்கு நிதி ஆதாரம் தேவைப்படுவதாகவும் பணம் திரட்ட தனது கணவரால் தான் முடியும் என்பதால் அவருக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்றும் வேம்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் 28 நாட்கள் செந்தில்குமார் விடுப்பு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது