Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடி பாவங்களை குறைப்பதற்காக ராமேஸ்வரத்தில் நீராடி ராமர் கோயிலை திறந்திருக்கிறார்! - மாணிக் தாகூர் பேட்டி!

Manikam Tagore MP

J Durai

, திங்கள், 29 ஜனவரி 2024 (11:29 IST)
70 லட்சம் மதிப்புள்ள 5 ஆழ்குழாய் அமைக்கும் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஒதுக்கி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர் மதுரை அவனியாபுரத்தில் உள்ள பெரியசாமி நகரில் போர்வெல் அமைக்கும் பணிகளை தொடக்கி வைத்தார் இதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்:


 
ராமேஸ்வரம் கடலில் புனித நீராடி அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்டதால் பாஜக தான் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி பெறும் என்று பாஜக திறப்பினர் கூறி வருவது குறித்த கேள்விக்கு

தனது பாவங்களை குறைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்கிறார், ராமர் அவரைக் காப்பாற்றுவார் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்.

மக்களின் பிரச்சினை முன்னிறுத்தி இந்த தேர்தல் நடக்கப் போகிறது, 2024 இந்தியாவிற்கு விடிவு வரும்.

இந்தியா கூட்டணி வெற்றி எந்த அளவுக்கு இருக்கிறது குறித்த கேள்விக்கு

வேலையில்லா இந்தியாவை உருவாக்கிய மோடியும், மதத்தை பரப்பிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும், இந்தியாவை பாதுகாப்பே இல்லாமல் உருவாக்கிய அமித்ஷா ஆகியோருக்கு இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கும்.


 
மோடி வருகையின் போது ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினர் என் விடுதலை செய்ததார்கள்குறித்த கேள்விக்கு

அரசு திட்டங்கள் ஆகட்டும், உயிர் பிரச்சினைகளாக இருக்கட்டும் அனைத்தையுமே மோடியை சம்பந்தப்படுத்தி செய்கின்ற நாடகங்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை, தமிழக மக்கள் அனைவரும் இந்த நாடகத்தை பார்த்தவர்கள்,இதை நிராகரித்தவர்கள் மோடியின் நாடகம் தமிழ்நாட்டில் எடுபடாது.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களை இலங்கை கடப்பினர் தொடர்ந்து கைது செய்வதும் இது குறித்து வெளியுறவு துறை அமைச்சர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத குறித்த கேள்விக்கு

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துன்புறுத்தி வருவது கண்டிக்கத்தக்கது, இதற்கான சுமூகமான தீர்வுகள் வரவேண்டும் என்று பல நாட்கள் முயற்சி செய்தும் மீனவர்கள் சிறை பிடிப்பது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத அரசு,

மீனவர்களை இரண்டு மூன்று மாதங்கள் சிறையில் அடைத்து அவர்களை விடுவிப்பது போல் கதை கட்டிக் கொண்டிருப்பது தொடர்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் மத்திய அரசு மாறுதல் வேண்டும்.

மதுரை மாநகராட்சி பாதாள சாக்கடை அமைக்கும் திட்ட பணிகளை மத்திய அரசு மதுரை  புறக்கணிக்கிறது.

திருப்பூர்,பல்லடத்தில் செய்தியாளர் தாக்கப்பட்ட கேள்விக்கு

பத்திரிக்கையாளர் மீது எந்த ஒரு தாக்குதல் செய்வதும் கண்டிக்கத்தக்கது, தமிழக காவல்துறை தவறு செய்தவர்களை கைது செய்யும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது என விருதுநகர் நாடாளு மன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறினார்...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் பதவியேற்றவுடன் நிதிஷ்குமார் அதிரடி.. சபாநாயகரை நீக்க கோரி நோட்டீஸ்