Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாநில தலைவர் அண்ணாமலை மிகப்பெரிய எழுச்சியை கொடுத்துள்ளார்-வானதி சீனிவாசன்!

மாநில தலைவர் அண்ணாமலை மிகப்பெரிய எழுச்சியை கொடுத்துள்ளார்-வானதி சீனிவாசன்!

J.Durai

கோயம்புத்தூர் , திங்கள், 17 ஜூன் 2024 (13:24 IST)
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 4 அங்கன்வாடி மையங்களுக்கு பூமி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். 
 
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை பாராளுமன்ற தொகுதியில் அதிகமான வாக்குகளை மக்கள் எங்களுக்கு அளித்திருக்கிறார்கள்.
 
மாநில தலைவர் அண்ணாமலை மிகப்பெரிய எழுச்சியை  கொடுத்துள்ளார்.
 
வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் அரசியல் என்பது மக்களுக்கு பணி செய்வது.மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
 
கடந்த 10 ஆண்டுகள் ஏழை எளிய மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பட்டியலினத்தைச் சார்ந்தவர்களுக்கும் அவர்களின் வாழ்க்கை திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என பிரதமர் உழைத்தாரோ, அதைவிட பல மடங்கு வரக்கூடிய ஐந்து ஆண்டுகளில் உழைப்பார்.
 
பிரதமர் மோடி உலக அளவில் எவ்வளவு பிரபலமாக இருக்கிறார். மூன்றாவது முறையாக அவரது ஆட்சி என்பது இந்தியாவை ஒரு வளர்ச்சியான நாடுகளின் பட்டியலில் சேர்க்க வளர்ச்சியான நாடாக மாற்றுவதற்கு பலமான அடித்தளத்தை அமைக்கும். 
பாஜக மகளிர் அணி சார்பாக லட்சக்கணக்கான மகளிர் முழு நேரமாக பணியாற்றினார்கள்.
 
இது வித்தியாசமான தேர்தலாக இருந்தது கோவையை பொறுத்தவரை மிகப் பலமான எதிர்பார்ப்பாக இருந்தது. தமிழகத்தில் அதிக அங்கன்வாடிகளை கொண்டுள்ள தொகுதியாக கோவை தெற்கு தொகுதி மாறி வருகிறது.
 
வரக்கூடிய காலத்தில் சட்டமன்றத் தேர்தலை நோக்கி எங்கள் பணிகள் விரைவுபடுத்தப்படும். தமிழகத்தில் எங்கள் வெற்றி வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கலாம் ஆனால் மத்தியில் நாங்கள் தான். நேற்று கோவையில் முப்பெரும் விழா நடத்தி திமுகவும் அவரது கூட்டணி கட்சியினரும் 2026 ஆட்சியைப் பிடிப்போம் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.
 40 எம்பிக்கள் இந்தியா கூட்டணிக்கு கிடைத்திருந்தாலும் கூட, மத்திய அரசு  பிரதமர் மோடிக்கு எவ்வாறு எதிராக செயல்படுகிறோம் என சவால்விடும் தொணியில் இல்லாமல் தமிழக மக்களின் நன்மைக்காக பணி செய்ய வேண்டும். 
 
சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு  இங்கு பிரச்சனை இருக்கிறது. இதற்கு மத்திய அரசு மட்டுமே தீர்வு தர முடியாது. கடுமையான மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு என ஒவ்வொரு நாளும் மக்களை கசிக்க பிழியும் அரசாக இந்த அரசு உள்ளது. ஒவ்வொரு முறை தமிழகத்துக்கு வரும் போதும் மோடி கோடிக்கணக்கான ரூபாய் திட்டங்களுடன் வருகிறார். நாங்கள் எப்போதும் தமிழகத்தின் நலனில் அக்கறையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
 
தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் பிஜேபி இரண்டாவது இடத்தில் வந்திருக்கிறது. வாக்கு சதவீதம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது
 
மக்களால் விரும்பக்கூடிய கட்சியாக மாறி கொண்டு இருக்கிறது பாஜக. புதிதாக இளைஞர் பட்டாளம் இன்று தலைவர்களாக கிடைத்திருக்கிறார்கள். 
தமிழகத்திலும் எங்களுடைய கால்கள் ஆழமாக பதித்திருக்கிறது. 
எங்களுடைய வளர்ச்சியை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
 
நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள் ஆனால் ஆட்சி எங்களிடம் உள்ளது திமுகவின் கூட்டணியில் இருந்தவர்கள் எவ்வளவு நாள் சட்டசபை தேர்தல் வரை கூட்டணியில் இருப்பார்கள் என நாங்களும் பார்க்கிறோம். எங்களுடைய ஆட்சி ஐந்து வருட காலம் எந்த சிக்கலும் இல்லாமல் சரியாக நடக்கும். தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் பெயரால் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மேடையில் இடம் கிடைத்து இருக்கிறது.
 
நாங்கள் விக்கிரவாண்டி தேர்தலில் நிற்கிறோம் வெற்றி பெறுவதற்காக வேலை செய்கிறோம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

19 வயது பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள்.. கொலையில் முடிந்த முக்கோண காதல்..!