Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்: கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி

Advertiesment
11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்: கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி
, செவ்வாய், 5 நவம்பர் 2019 (21:28 IST)
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சியின் 11 எம்எல்ஏக்கள் தகுதி செய்ய வேண்டுமென்றும் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை ஒன்றை ஜனாதிபதி தள்ளுபடி செய்துள்ளார் 
 
டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் உள்பட 11 எம்எல்ஏக்கள் இரட்டை பதவிகளை வகித்து வருவதாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு எம்எல்ஏ மற்றொரு பதவியை வகிப்பது சட்டவிரோதம் என்றும், இதனால் இந்த 11 எம்எல்ஏக்களின் பதவியை நீக்க வேண்டும் என்றும் புகார் அளிக்கப்பட்டது 
 
இந்த புகார் குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசுக்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம் 11 எம்எல்ஏக்களும் இரட்டை பதவிகளை வகித்தாலும், கூடுதலான பதவி மூலம் சம்பளம் உட்பட எந்த சலுகையையும் அவர்கள் பெறவில்லை என்றும், அதேபோல் கூடுதல் அதிகாரமும் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை என்றும், எனவே இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் பதிலளித்தது 
 
இந்த பதிலை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், ஆம் ஆத்மி கட்சியின் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை நிராகரித்தார். இதனை அடுத்து டெல்லியில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு! – ஓபிஎஸ் பேட்டி!