Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று சென்னை வருகிறார் ஜனாதிபதி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Advertiesment
இன்று சென்னை வருகிறார் ஜனாதிபதி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
, திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (07:15 IST)
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று சென்னை வர இருப்பதை அடுத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளனர்
 
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று சென்னை வருகிறார். இதற்காக போலீசார் நேற்று காலை முதலே தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் 5 அடுக்கு பாதுகாப்பு சென்னை சட்டசபை வளாகத்தில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதிவிரைவு படையினர், போக்குவரத்து காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து ராஜ்பவன் வரை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு குடியரசு தலைவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஊட்டி செல்ல வருகிறார் என்பதை அடுத்து ஊட்டியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

19.89 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!