Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

களைக்கட்டும் பொங்கல் பண்டிகை..! மண் பானைகள் தயாரிக்கும் பணி மும்மரம்..!!

Advertiesment
pots

Senthil Velan

, செவ்வாய், 9 ஜனவரி 2024 (10:47 IST)
கரூர் அருகே பொங்கலுக்கு தேவையான பானைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக  நடைபெற்று வரும் நிலையில், மண் எடுக்க அதிகாரிகள் கெடுபிடி செய்வதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வசதி படித்தோர் பொங்கல் பண்டிகையின் போது மண்ணில் ஆன பானைகள் வாங்கி பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம்.
ALSO READ: மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதீர்.! அமைச்சர் சிவசங்கர்..!!
 
இந்த மண்பானைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் கரூர் மாவட்டத்திலேயே கிருஷ்ணா ராயபுரம் அருகில் லாலாபேட்டை பகுதியில்  மூன்று தலைமுறையாக இருந்து வருகின்றனர். இங்கு திருமணத்திற்கு தேவைப்படும் பானை அடுப்பு,  குழம்பு சட்டி, சிட்டி விளக்குகள் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. கரூர் மாவட்டம் முழுவதும் இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்கள்தான் விற்பனை செய்யப்பட்டுகிறது.
 
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தேவையான மண் எங்கே வேண்டுமானாலும் அல்லலாம் என விதிவிலக்கு அரசு அளித்துள்ளது. ஆனால்  அதிகாரிகள் மண் அல்ல கெடுபிடி காட்டுவதாகவும்,  இதனால் பானைகள் செய்வதில் பிரச்சனை ஏற்படுகிறது எனவும் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  மண் அல்ல விதிவிலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானையில் உற்பத்தி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 1 படி பானை ரூ.150-க்கு,  2 படி பானை ரூ.200, 3.படி பானை 300, குழம்பு சட்டி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு வாரமாக தொடர்ந்து சரிந்து வரும் தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!