Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை பளார் பளார் என விளாசிய பிரேமலதா விஜயகாந்த்!

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (12:16 IST)
கடலூரில் நேற்று தேமுதிக சார்பில் தனியார் சர்க்கரை ஆலை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினியை கடுமையாக விளாசி பேசினார்.
 
முற்றுகை போராட்டத்தின் போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், யாரெல்லாமோ இன்றைக்கு அரசியலுக்கு வருகிறார்கள். இதுவரை தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறோம் என்கிறார்கள்.
 
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வாருங்கள். அதுபற்றி எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் விஜயகாந்தை மாதிரி தைரியமாக களத்தில் இறங்கி மக்களுக்காக போராடக்கூடிய வீரராக வர வேண்டும். மக்கள் பிரச்சினைகளை அறிந்து போராட வேண்டும்.
 
மைக்கை பார்த்தாலே பயமாக இருக்கிறது, பத்திரிகையாளர்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது, கொள்கை என்னவென்று கேட்டாலே தலை சுற்றுகிறது என்கிறவங்க வீட்டில் இருக்க வேண்டியது தானே? ஒரு ரூமுக்குள் உட்கார்ந்து கொண்டு டிவிட்டரில் ஆட்சி செய்ய முடியாது. உங்களை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.
 
ரஜினியின் அரசியல் பிரவேசத்தை இப்படி கடுமையாக விளாசித்தள்ளிய பிரேமலதா விஜயகாந்த் மீது ரஜினி ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments