தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 2005ஆண்டு தன் கட்சியை தொடங்கினார். இதுநாள் வரை அவர் தான் தலைவராக இருந்து வருகிறார்.ஆனால் அவரது மனைவியும் தேமுதிகவும் மகளிர் அணி தலைவியுமான பிரேமலதாவிற்கு எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அவர் கட்சியின் பொருளாளராக தேர்வு செய்யப்படுள்ளார்.
அதேசமயம் தற்போது கட்சித்தலைவராக உள்ள விஜயகாந்த் நிரந்தரத் தலைவராகவும் ,நிரந்தர பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும் அவைத்தலைவராக இளாங்கோவன்,கொள்கை பரப்பு செயலாளராக அழகாபுரம் மோகன்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இந்த பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளாதாகவும்,கட்சியை பலப்படுத்தும் விதத்திலும் இந்த முடிவு எடுத்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.