ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுகிறாரா பிரேமலதா விஜயகாந்த்?

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (11:06 IST)
தேமுதிக பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அதிமுக தரப்பில் பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் தனது சமீபத்திய பேட்டியில், தேமுதிக தனித்து போட்டியிட்டாலும் 234 தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதேநேரம் கூட்டணி தர்மத்தை மதிக்கும் கட்சி இது. எந்த கட்சியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. 

இந்நிலையில் ஜெயங்கொண்டம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக தேமுதிக வின் ஆலோசனைக் கூட்டம் தா.பழூரில் நடந்த போது மாநில கலை இலக்கிய அணி அமைப்பாளர் விஜயகண்ணன் பேசியுள்ளார். ஜெயங்கொண்டம் தொகுதி இப்போது ஆளும் கட்சியான அதிமுகவின் வசம் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

அடுத்த கட்டுரையில்
Show comments