தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வர் பழனிசாமி குறித்து கூட்டணி கட்சியான தேமுதிகவின் பிரேமலதா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் மற்ற கூட்டணி கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து சசிக்கலா ஆதரவாகவும், அதிமுகவை குறைப்பட்டு கொள்ளும் விதத்திலும் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கூட்டணி குறித்து பேசியுள்ள அவர் “கடந்த 2011 சட்டமன்ற தொகுதியில் 41 தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டோம் எதிர்வரும் தேர்தலிலும் அந்த அளவிலேயே எதிர்பார்க்கிறோம். முதல்வர் பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல. அவர் அதிமுகவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். சசிக்கலா அரசியலுக்கு வரவேண்டும் என ஒரு பெண்ணாக நான் ஆதரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.