Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திண்டிவனத்தில் தவறான சிகிச்சை? தாய் – சேய் உயிரிழப்பு? – உறவினர்கள் புகார்!

Pregnant woman
Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (11:47 IST)
திண்டிவனத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தாய் – சேய் உயிரிழந்ததாக உறவினர்கள் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் அருகே உள்ள ஏந்தூர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சௌந்தர்ராஜன். இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சந்தியா மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார்.

சமீபத்தில் அவர் பிரசவத்திற்காக பிரம்மதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிசேரியன் செய்துதான் குழந்தையை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

ALSO READ: 10 லட்சம் பத்தாது, பிரியா குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் கொடுங்க: எடப்பாடி பழனிசாமி

சந்தியாவிற்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்த நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியது சந்தியா குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து சந்தியாவின் உடல்நலம் மோசமடைந்ததால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுவை ஜிப்மர் என அடுத்தடுத்து மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

கடைசியாக ஜிப்மரில் சிகிச்சை பலனின்றி சந்தியா உயிரிழந்தார். இந்நிலையில் சந்தியா உயிரிழந்ததற்கு மருத்துவமனையின் அலட்சியமான சிகிச்சையே காரணம் என ரோசனை காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து உறவினர்கள் சந்தியா மரணம் குறித்து விளக்கம் தெரியாமல் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமானங்களுக்கான வான்வழியை மூடியது பாகிஸ்தான்.. பதிலடியா?

மோடி போட்ட உத்தரவு? பாகிஸ்தான் கடல்பகுதியில் நுழையும் விக்ராந்த் போர் கப்பல்? - அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் திறப்பது எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு..!

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments