திண்டுக்கல் மாவட்டத்தில் 4 வயது சிறுமி வன்கொடுமை செய்து துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் உள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவருக்கு கீர்த்திகா என்ற மனைவி உள்ளார். சமீபத்தில் கீர்த்திகா திருப்பூரை சேர்ந்த தம்பதி ஒருவரிடம் இருந்து 4 வயது சிறுமியை தனது வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.
அந்த சிறுமி சேட்டை செய்ததால் கீர்த்திகா சூடு வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் உடல்நிலை பாதித்த நிலையில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் தம்பதியரை கைது செய்து விசாரித்ததில் ராஜேஷ்குமார் சிறுமியை வன்கொடுமை செய்ததும், அதற்கு அவரது மனைவி கீர்த்திகா உடந்தையாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கை போலீஸார் போக்சோ வழக்காக பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.