Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிகிச்சை அளிக்காததால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..

Advertiesment
சிகிச்சை அளிக்காததால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..

Arun Prasath

, ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (15:21 IST)
மதுரையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் உயிரிந்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பணியான சக்திகாளி என்பவர், புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். அப்போது திடீரென கர்ப்பிணியின் உடல்நிலை மோசமானது. அதன் பிறகு உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து சக்திகாளியின் கணவர் மணிமுத்து, ”மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் இரவு பணியில் மருத்துவர் இல்லாத நிலையில் பணியில் இருந்த செவிலியர்கள் தாக்கியதன் காரணமாக கர்ப்பிணி உயிரிழந்ததாகவும், கர்ப்பிணிக்கு இரத்தப்போக்கு ஏற்பட்ட பிறகும், வேறு மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்காதது  தான் கர்ப்பிணி இறந்ததற்கான காரணம்” எனவும் புகார் அளித்துள்ளார். அப்புகாரை தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் விலை மீண்டும் வீழ்ச்சி – மக்கள் மகிழ்ச்சி !