Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர் துபாயில் கைது: இந்தியா கொண்டுவர நடவடிக்கை

மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர் துபாயில் கைது: இந்தியா கொண்டுவர நடவடிக்கை
, புதன், 13 டிசம்பர் 2023 (13:01 IST)
மகாதேவ சூதாட்ட செயலி உரிமையாளர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  
 
மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களில் ஒருவரான ரவி உப்பல் என்பவர் துபாயில் உள்ளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை இந்தியாவுக்கு கொண்டு வர துபாய் போலீஸ் அதிகாரிகளுடன் அமலாக்கத்துறை பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  
 
மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கி  பல மோசடிகள் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு கலந்துள்ளது. குறிப்பாக சத்தீஸ்கர் மற்றும் மும்பை போலீஸாருடன் மகாதேவ் சூதாட்ட செயலி மூலம் நடந்த பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறையின் வேண்டுகோளின் படி இன்டர்போல் போலீஸார் ரெட் நோட்டீஸ் வழங்கி இருந்த நிலையில் தற்போது அவர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணல் கொள்ளையை தடுத்த வி.ஏ.ஓவுக்கு கன்னத்தில் அறை! – அறைந்த நபர் கைது!