பாஜக-வை வீழ்த்துவதுதான் என்னுடையை குறிக்கோள் என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து பாஜகவினருக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். தன்னுடையை டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக அவர் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
எனது நண்பரும், பத்திரிக்கையாளருமான கவுரியின் மரணம் என்னை உலுக்கிவிட்டது. அவளின் குரல் அடங்கியபோது, நான் குற்ற உணர்ச்சியுண்ட இருந்தேன். அவளை நாம் தனியாக போராட வைத்து விட்டோம். இப்போது, நான் பேச தொடங்கியுள்ளேன். மோடியிடம், நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்னவானது எனக்கேட்டால், அவர் உடனே நேருவை பற்றி பேசுகிறார். 100 வருடங்களுக்கு முன்பு நடந்தது பற்றி பேசுகிறார். ஆனால், இந்த 4 வருடன் என்ன நடந்தது என்பது பற்றி பேசுவது இல்லை. மோடி அரசு மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை. எதிர்த்து கேள்வி கேட்டால் என்னை பாகிஸ்தானுக்கு செல் என்கிறனர். இந்தியாவையும் பாகிஸ்தான் போல் மாற்ற பாஜக அரசு முயல்கிறது. இங்கே மதம்தான் அரசியல் தீர்மானிக்கிறது. ஒரு மதம் நாட்டை ஆண்டால் இப்படித்தான்.
மோடியை எதிர்ப்பதால் எனக்கு பாலிவுட் வாய்ப்புகள் வருவதில்லை. பரவாயில்லை. என்னிடம் பணம் இருக்கிறது. நானும் அரசியலுக்கு வந்து விட்டேன். ஆனால், தேர்தலில் நிற்க போவதில்லை. அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை. ஆனால், பாஜகவை வீழ்த்துவதே என் லட்சியம். அதுவே என் அரசியல்” என அவர் பேசினார்.