Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண்டஸ் புயல் எதிரொலி: | மாமல்லபுரத்தில் மின் இணைப்பு துண்டிப்பு!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (21:05 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் இன்று இரவு சென்னை மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மகாபலிபுரம் கடற்கரையில் சுமார் 10 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பி வருவதாகவும் அங்கு கனத்த மழை பெய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இதனை அடுத்து மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் புயல் கரையை கடந்த போது ஏதாவது இருக்கிறதா என்பதை சரி பார்த்து அதன் பின்னரே மின் இணைப்பு கொடுக்கப்படும் என்றும் தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் மகாபலிபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுதி எல்லைக்குள் நுழைந்த மோடி விமானம்! சுற்றி வந்த அரேபிய போர் விமானங்கள்! - வைரலாகும் வீடியோ!

ஹார்ன் சவுண்டில் மிருதங்கம், புல்லாங்குழல் இசை..! மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய சட்டம்!

முதல்முறையாக தமிழகத்தில் தொங்கு சட்டசபை.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

ஏப்ரல் 28 வரை தமிழ்நாட்டில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

10G இண்டர்நெட் அறிமுகம் செய்த சீனா.. இந்தியாவில் இதெல்லாம் எப்போது வரும்?

அடுத்த கட்டுரையில்
Show comments