Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் 10ஆம் தேதி இன்னொரு காற்றழுத்த தாழ்வா? தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்..!

Siva
புதன், 4 டிசம்பர் 2024 (11:14 IST)
டிசம்பர் 10ஆம் தேதிக்கு பிறகு வங்கக்கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பெஞ்சால் புயல் வங்கக் கடலில் தோன்றி தமிழகம் மற்றும் புதுவையில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த சேதத்தின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் சில மாவட்ட மக்கள் மீளவில்லை.

இந்த நிலையில், டிசம்பர் 10ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், டிசம்பர் 10 முதல் 15ஆம் தேதிக்குள் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா, புயலாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், டிசம்பர் மாதத்தில் இரண்டு அல்லது மூன்று சுற்று மழை இருக்கும் என்றும், அதில் ஒன்று தீவிரமான மழையாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகத்தில் தீவிரமாக இருக்கும் நிலையில், அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மையங்கள் உருவாகி மழை பெய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

வெள்ளை மாளிகையில் ஒரு கோமாளி தலைவராக இருக்கிறார்: ஒவைசி கடும் விமர்சனம்..!

முதல்முறையாக அந்தமானில் அமலாக்கத்துறை ரெய்டு.. ரூ.200 கோடி மோசடி கண்டுபிடிப்பு..!

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments