Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சேறு வீசியதை பெரிதுபடுத்தி அரசியலாக்க விரும்பவில்லை: அமைச்சர் பொன்முடி

Mahendran
புதன், 4 டிசம்பர் 2024 (11:07 IST)
என் மீது சேற்றை வீசியதை அரசியல் ஆக்க விரும்பவில்லை என்றும் எங்கள் நோக்கம் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்பதுதான் என்றும் அமைச்சர் பொன்முடி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு அருகே மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட அமைச்சர் பொன்முடி சென்ற போது, அவர் மீது மர்ம நபர்கள் சேறு வீசியதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி பேசிய போது, “நாங்கள் வெள்ள நிவாரண பணியை ஆய்வு செய்ய சென்றபோது எங்கள் பின்னால் இருந்து யாரோ சேற்றை வீசியிருக்கிறார்கள். முன்னால் நின்று சேற்றை வாரி இறைக்க, நமது ஆட்கள் அதை விடுவார்களா? அந்த சம்பவத்துக்கு பிறகும் கூட நான் பல்வேறு இடங்களுக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொண்டு வந்தேன்.

எனது பணியில் எந்தவித தடையும் இல்லை. அரசியல் நோக்கத்திற்காக சிலர் இவ்வாறு செய்வதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. இதை அரசியல் ஆக்க விரும்பவில்லை. வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதுதான் எங்கள் நோக்கமே. இதை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் எங்களுக்கு கிடையாது,” என்று அவர் தெரிவித்தார்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம், வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

பிணமே கிடைக்கல.. பாபநாசம் பட ஸ்டைலில் நடந்த கொலை! - மனைவியை கொன்ற கணவன் சிக்கியது எப்படி?

சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை: டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!

ஆந்திரா-தெலுங்கானாவில் திடீர் நிலநடுக்கம்: சாலையில் அச்சத்துடன் பொதுமக்கள்..!

பணையக் கைதிகளை விடுங்க.. இல்லைன்னா உயிர விடுங்க..? ஹமாஸ்க்கு கெடு விதித்த டொனால்டு ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments