மோசமாக ஆபாசமாக பேசும் ‘பொறுக்கி’: வரம்பு மீறி பேசும் சுப்பிரமணியன் சுவாமி!
மோசமாக ஆபாசமாக பேசும் ‘பொறுக்கி’: வரம்பு மீறி பேசும் சுப்பிரமணியன் சுவாமி!
‘பொறுக்கி’ புகழ் சுப்பிரமணியன் சுவாமி தமிழர்களை சீண்டுவதையே தனது முழு நேர பணியாக செய்கிறார் போல. தினமும் பொறுக்கிகள் என திட்டாமல் பதிவிட மாட்டார். அவரது டுவிட்டரை பொறுக்கி என்ற ஒற்றை வார்த்தை அதிகமாக ஆக்ரமித்து இருக்கும்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தங்கள் கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாக்க தமிழக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டக்காரர்களை பொறுக்கிகள் என கூற ஆரம்பித்த சுப்பிரமணியன் சுவாமி பின்னர் ஒட்டுமொத்தமாக தமிழ் பொறுக்கிகள் என கூற ஆரம்பித்தார்.
இதனையடுத்து தமிழகத்தில் சுப்பிரமணியன் சுவாமிக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. பலரும் அவருக்கு கண்டனங்கள் தெரிவித்தனர். ஆனாலும் சுப்பிரமணியன் சுவாமி அடங்கியபாடில்லை. தொடர்ந்து பொறுக்கிகள், எலி, நக்சல்கள், ஜிகாதிகள் என வசை பாடியவாறே இருக்கிறார்.
இதனால் பலரும் சுப்பிரமணியன் சுவாமியின் தமிழர் விரோத டுவிட்டுகளில் தங்கள் எதிர்ப்புகளையும் அவரை திட்டியும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் பொறுக்கிகள் எப்படிபட்டவர்கள் என டுவிட்டரில் விளக்கம் அளித்தார்.
அதில், பொறுக்கிகள் அரைகுறை அல்லது முழுமையாக படிப்பறிவில்லாதவர்கள் இதில் ஆண், பெண் இருவரும் அடக்கம். மோசமான வார்த்தைகளால் பேசுவார்கள் அல்லது டுவீட் செய்வார்கள். வன்முறையாக மிரட்டுவார்கள் பின்னர் ஓடிவிடுவார்கள் என கூறியிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் பொறுக்கிகள் குறித்த விளக்கத்தில், பொறுக்கிகள் மிகவும் மோசமாக ஆபாசமாக பேசுவார்கள், வன்முறையாக அச்சுறுத்துவார்கள் ஆனால் பதிலடி கொடுத்தால் ஓடிவிடுவார்கள் என கூறியுள்ளார்.