Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ரத்தாகும் என்பதை எதிர்பார்த்தோம்: பூண்டி கலைவாணன்

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (08:04 IST)
திருவாரூர் தேர்தல் ரத்தாகும் என்று ஏற்கனவே நாங்கள் எதிர்பார்த்தோம் என்று திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'அதிமுக, பாஜக நடவடிக்கைகளை வைத்தே தேர்தல் ரத்தாகும் என கணிக்க முடிந்தது. தேர்தல் ஆணையம் தன்னாட்சியோடுதான் இயங்குகிறதா என்ற கேள்வி தற்போது எழுகிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தபோது அதிமுக-பாஜக மட்டும் வேட்பாளர்களை அறிவிக்காதது ஏன்? பாஜக ஆயிரம் வாக்குகளைக்கூட வாங்காது என்பதால்தான் ரத்து செய்யப்பட்டுள்ளது என திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் ரத்துக்கு மத்திய, மாநில அரசுகள் இரண்டும்தான் காரணம் என்றும் அவர்களுக்கு தெரிந்துதான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது என்று பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினே திருவாரூர் தேர்தல் நடத்த இது உகந்த நேரம் இல்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments