Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் தேர்தல் ரத்து: தலைவர்கள் கருத்து

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (06:50 IST)
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் வரவிருக்கும் நிலையில் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத நிலையில் தமிழக மக்களின் மனநிலையை தெரிந்து கொள்ளும் ஒரு முன்னோட்டமாக திருவாரூர் தேர்தல் பார்க்கப்பட்டது. ஆனால் கஜா புயலை காரணம் காட்டி இந்த தேர்தலை எதிர்கொள்ள எந்த கட்சிக்கும் தைரியம் வரவில்லை என்று கூறப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியில் சிக்கல் ஏற்படும் என ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் கருதின

இந்த நிலையில் எதிர்பார்த்தது போலவே திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு சற்றுமுன் தேர்தல் ஆணையத்திடம் இருந்து வெளிவந்துள்ளது.

இதனையடுத்து திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என திருவாரூர் தொகுதியின் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.காமராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல் திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றமளிக்கிறது என்று தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். மேலும் திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை ரத்து செய்தது சரியான நடவடிக்கையே என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் திருவாரூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறேன் என்றும் தேவையற்ற இடைத்தேர்தல் என்றும் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments