Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

Siva
வெள்ளி, 6 ஜூன் 2025 (18:04 IST)
சென்னையில் நடைமுறையில் இருக்கும் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தின் கீழ், பூந்தமல்லி – போரூர் வழித்தடம் வரும் டிசம்பர் மாதத்தில் பயணத்திற்காகத் தயாராகும் என மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக் அறிவித்துள்ளார்.
 
மொத்தம் 116 கிலோமீட்டர் நீளத்தில் மூன்று முக்கிய வழித்தடங்களாக 2-ஆம் கட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை செல்லும் பாதை முக்கியமானதாகும். கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்க பாதையாகவும், பவா ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை மேம்பால பாதையாகவும் கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
 
இதில், பூந்தமல்லி - போரூர் இடையே இருக்கும் பாதையில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த பகுதியில் டிசம்பரில் சேவை தொடங்க உள்ள நிலையில், சோதனை ஓட்டங்கள் கடந்த வாரங்களில் மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ளன.
 
இன்று நடைபெற்ற மூன்றாவது சோதனை ஓட்டத்தில், பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கி.மீ. தூரம், மணிக்கு 20-25 கி.மீ. வேகத்தில் ஓட்டப்பட்டது. இந்த முறையில் டவுன் லைனில் ஓட்டம் நடைபெற்றது. ஒரு மாதத்துக்குள் முழு வேக சோதனை ஓட்டம் நடக்கவுள்ளது.
 
இதனையடுத்து, பூந்தமல்லி – போரூர் மெட்ரோ டிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதத்தின் கடைசி நாளில் சரிந்தது தங்கம்.. இன்னும் சரிய அதிக வாய்ப்பு?

நாங்கள் உறுப்பினர்களாக சேரவே இல்லை.. ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் தோல்வியா?

தவெகவில் ஓபிஎஸ்? அவைத்தலைவர் பதவி வழங்குகிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அம்மாவை தப்பா பேசிய உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! - கூட்டணி முறிவை படம் போட்டு காட்டிய ஓபிஎஸ் அறிக்கை!

இந்தியா கச்சா எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் நிற்கும் நிலை வரலாம்..? - ட்ரம்ப் கிண்டல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments