பொங்கல் விடுமுறை தினங்களில் டாஸ்மாக் விற்பனை இத்தனை கோடியா?

Webdunia
ஞாயிறு, 17 ஜனவரி 2021 (17:26 IST)
தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை சாதாரண நாட்களிலேயே கோடிக்கணக்கில் நடைபெறும் நிலையில் பொங்கல் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும் என்பது தெரிந்ததே 
 
அந்த வகையில் தற்போது பொங்கல் விடுமுறை தினங்களான 13 முதல் 16 வரையிலான தினங்களில் விற்பனையான தொகை மிகப் பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பொங்கல் விடுமுறை தினங்களில் மட்டும் மொத்தம் ரூபாய் 589 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஆகியுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது 
 
பொங்கல் விடுமுறை தினங்களான 13, 14, மற்றும் 16 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் மொத்தம் ரூபாய் 589 கோடிக்கு விற்பனையாகி தாகவும் குறிப்பாக இந்நாட்களில் முறையே ரூ.147.75 கோடி, ரூ.269.43 கோடி, ரூ.172 கோடிக்கு மது விற்பனை ஆகியிருப்பதாகவும் தகவல் வெளிவ்நதுள்ளது. ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் என்பதால் அன்றைய தினம் டாஸ்மாக் விடுமுறை என்பது குறிப்பிடதக்கது
 
மூன்றே நாட்களில் தமிழகத்தில் மட்டும் 589 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஆகியிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாவோயிஸ்ட் வேட்டை! ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்த மாவோயிஸ்ட் முக்கிய தலைவன்!

எதிர்காலத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக வாழ்வார்கள்! - டொனால்டு ட்ரம்ப்!

தமிழக முதல்வர் ஸ்டாலினை திடீரென சந்தித்தது ஏன்? திருமாவளவன் விளக்கம்..!

இத்தாலி பிரதமர் மெலோனியை 'அழகி' என்று புகழ்ந்த டிரம்ப்..! குவியும் கண்டனங்கள்..!

ஹிஜாப் விவகாரம்: கேரள கத்தோலிக்க பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை.. பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments