பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் விவரம் வரும் பின்வருமாறு...
சமீபத்தில் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மொத்தம் 10,300 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மொத்தம் 6,468 பேருந்துகளும் என மொத்தம் 16,768 பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவதற்கு ஏதுவாக தமிழகத்தில் 16,709 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
ஜனவரி 22 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு நெல்லைக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்
ஜனவரி 13 ஆம் தேதி நெல்லையில் இருந்து இரவு 9.30 மணிக்கு தாம்பரத்திற்கு அதிவிரைவு சிறப்பு ரயில்
ஜனவரி 13 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3.30 மணிக்கு நாகர்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்
ஜனவரி 14 ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 3.10 மணிக்கு சென்னை எழும்பூருக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்