பொங்கல் சிறப்பு பேருந்துகள்: களைகட்டும் முன்பதிவுகள்!

Webdunia
சனி, 14 டிசம்பர் 2019 (15:42 IST)
எதிர்வரும் பொங்கல் விழாவுக்கு மக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் முன்பதிவுகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.

தமிழகம் முழுவதும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா ஜனவரியில் நடைபெற உள்ளது. பொங்கலுக்கு தொடர்ந்து 3 நாட்கள் வரை விடுமுறை கிடைக்கும் என்பதால் மக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் 30 நாட்களுக்கு முன்பே பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. பொங்கல் தேதியன்று புறப்படும் ரயில்களில் ஏற்கனவே முன்பதிவுகள் முழுமையாக முடிந்து விட்டதால் பேருந்து முன்பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பதிவு செய்து பயணிப்போர் தவிர அந்த சமயத்திற்கு முன்பதிவு செய்யாமல் பயணிப்போரும் கணிசமாக இருப்பதால் அவர்களும் விழா நேரத்தில் ஊர்களுக்கு செல்லும் வகையில் கூடுதலாக பேருந்துகளை ஏற்பாடு செய்யவும் அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த தலைவர்களை இழக்கிறார் ஈபிஎஸ்.. கட்சி மாற தயாராகும் அதிமுக பிரபலங்கள்?

உச்சம் தொட்ட காய்கறி விலை.. தக்காளி ரூ.110, முருங்கைக்காய் ரூ.380.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இந்திய குழந்தைகள் நம் கண் முன்னே மூச்சு திணறி கொண்டிருக்கிறார்கள்.. ராகுல் காந்தியின் எக்ஸ் பதிவு..!

நாளை சூரியன் வரும், இருளுக்கு அஞ்ச வேண்டாம்.. உதயநிதி முதல்வராவார் என்பதை மறைமுகமாக கூறிய கமல்?

செங்கோட்டையனின் தவெக வருகை ஒரு 'டிரெண்ட் செட்டர்! இனி களம் திமுக - தவெக தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments